ஒன்ராறியோ முதியோர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் திட்டம்!

ஒன்ராறியோ மாநில அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தை நேற்று (16) சமர்ப்பித்தது.

ஒன்ராறியோ முதியோர், அணுகை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, முதியோரின் ஆரோக்கியம், உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உறுதி செய்துள்ளது. மேலும், மூத்த முன்னாள் படைவீரர்களின் நலன்சார் விடயங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ மாநில அரசாங்கம் முதியோரின் நலனில் அக்கறைக் கொண்டுள்ளதுடன் அவர்களுக்காக பணியாற்றுவதை உறுதிசெய்துள்ளதாக முதியோர், அணுகை அமைச்சரும், ஸ்காபரோ வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ரேமண்ட் சோ (Raymond Cho) தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ரேமண்ட் சோ, எங்கள் சமூகத்தின் அடித்தளமாக முதியோர் இருக்கின்றனர். அவர்கள் நிலையான, நம்பகமான, உயர்தர வாழ்க்கையைப் பெற உரித்துடையவர்கள். எனவே, அவர்களுக்கு மேலும் வசதியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதே எமது முதன்மை குறிக்கோளாகும்.

முதியோரின் வாழ்வைப் பாதுகாத்தல்.

மாநில அரசாங்கம் முதியோரின் செயல்பாட்டு மையம் (Seniors Active Living Centre) திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் 17 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் முதியோருக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், சமூக உறவுகளை மேலும் வலுத்துப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாநிர அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டை 10% அதிகரித்து, ஒவ்வொரு செயல்பாட்டுத் திட்ட மையத்திற்கும் 55,000 டொலர் நலத் திட்டங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் டொரண்டோ பெருநகரின் ஸ்காபரோவில் உள்ள மூன்று முதியோர் அமைப்புக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன், மாநிலத்தில் செயல்பட்டு வரும் 413 முதியோர் செயல்பாட்டு மையங்களும் இந்த நிதி ஒதுக்கீட்டில் பயன்பெறவுள்ளன.

மூத்த முன்னாள் படைவீரர்களுக்கான உதவிகள்.

மாநில அரசாங்கம், இந்த நிதி ஒதுக்கீட்டில் முதியோரின் சமூக நிதியுதவித் திட்டத்திற்காக (Seniors Community Grant) 3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி, மூத்த முன்னாள் படைவீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் சமூக செயல்பாடுகளுக்கும், கல்வி வாய்ப்புக்களை வழங்குவதற்கும் செலவிடப்படவுள்ளது.

புதிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம், முதியோர் சமூக நிதியுதவித் திட்டத்திற்கான நிதியை அதிகரித்து, முதியோரின் ஆரோக்கியம், மனநல ஆரோக்கியம் ஆகியவற்றை உறுதிசெய்து சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஒன்ராறியோ அரசாங்கம் உறுதிப்படுத்துவதாக அமைச்சர் ரேமண்ட் சோ மேலும் தெரிவித்தார்.

முதியோர் தங்களின் வீடுகளில், சமூகத்தின் முழுமையான, நம்பகமான உயர்தர வாழ்க்கையை வாழ்வதை இதன்மூலம் உறுதிசெய்வதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
நேரம் மாறும் நேரம் வந்துவிட்டது!
01:22
Video thumbnail
குறைந்த வருமானமுடைய கனேடியருக்கு Automatic Tax Filing திட்டம்!
01:26
Video thumbnail
கனடா போஸ்ட் சுழற்சி முறையில் வேலை நிறுத்தம்! அடுத்த வாரம் தபால் சேவை ஆரம்பமாகும்!
01:04
Video thumbnail
டொராண்டோ கிழக்கு பகுதியில் வெள்ளை வேன் பட்டப் பகலில் திருட்டு! வலை வீசும் பொலிசார்
00:57
Video thumbnail
Top 25 Most Wanted பட்டியல்! டொராண்டோ கொலை சந்தேக நபர் முதலிடத்தில்
01:03
Video thumbnail
Top 25 Most Wanted பட்டியல்! டொராண்டோ கொலை சந்தேக நபர் முதலிடத்தில்
00:57
Video thumbnail
கனடா போஸ்ட் வேலைநிறுத்தம் காரணமாக டொராண்டோவில் வேகக் கேமரா அபராதங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!
01:15
Video thumbnail
கனடாவில் முதல்முறையாக துடிப்பு நின்ற இதயத்தை பயன்படுத்தி இதய மாற்று அறுவை சிகிச்சை!
01:30
Video thumbnail
தொடரும் கனடா போஸ்ட் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்
00:47
Video thumbnail
கனடாவில் கடுமையான அகதிகள் சட்டம்!
01:36

Related Articles

Latest Articles