ஒன்ராறியோவில் வரலாறு காணாத பனிப்புயல் – இயல்பு வாழ்க்கை முடக்கம்!

வடகிழக்கு ஒன்ராறியோ (Northeastern Ontario) பகுதியில் வீசி வரும் வரலாறு காணாத கடும் பனிப்புயல் காரணமாக அப்பகுதியே பனிப்போர்வையால் சூழப்பட்டுள்ளது.

குறிப்பாக சட்பரி (Greater Sudbury) மற்றும் சூ செயின்ட் மேரி (Sault Ste. Marie) போன்ற பகுதிகளில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

இந்த ‘முன்னெப்போதும் இல்லாத’ புயல் காரணமாக North Bay, Timmins உள்ளிட்ட நகரங்களில் அவசர நிலை போன்ற சூழல் நிலவுகிறது. பல பிரதான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Laurentian University மற்றும் Cambrian College போன்ற கல்வி நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை சீராகும் வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை -33 டிகிரி செல்சியஸ் வரை கடுங்குளிர் நிலவக்கூடும் என்பதால் உறைபனி ஆபத்து (Frostbite) குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles