ஒன்டாரியோவில் தட்டம்மை நோய் பாதிப்பு உயர்வு!

ஒன்டாரியோவில் அதிகரித்து வரும் தட்டம்மை நோய் (Measles) தொற்றினால் இதுவரை 572 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் இவர்களில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஒன்டாரியோவில் பெருமளவில் பரவியுள்ள இந்த தொற்றின் தாக்கம் ஏனைய மாகாணங்களிலும் சிறிய அளவில் பரவத் தொடங்கியுள்ளதாகவும் இதுகுறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தட்டம்மை நோய் கடுமையாக பாதிக்கப்பட்டால் நிமோனியா, மூளைத்தொற்று, இறப்பு உள்ளிட்ட அபாயகரமான நிலையை எட்டக்கூடும் என மருத்துவர்கள் எச்சரத்துள்ளனர்.

Related Articles

Latest Articles