ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சிறப்பு உறுப்பினராக ஜஸ்டின் ட்ரூடோ நியமனம்!

citynews

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Oxford University) ஒரு புதிய உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

அங்குள்ள பிளவாட்னிக் அரசுப் பள்ளியில் (Blavatnik School of Government) ‘சிறப்பு ஆய்வாளர்’ (Distinguished Fellow) மற்றும் ‘உலகத் தலைவர்கள் வட்டத்தின்’ (World Leaders Circle) உறுப்பினராக 54 வயதான ஜஸ்டின் ட்ரூடோ இணைந்துள்ளதாக அப்பள்ளி வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) மற்றும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) போன்ற சர்வதேச முன்னாள் தலைவர்கள் அடங்கிய அமைப்பில் தற்போது ட்ரூடோவும் இணைந்துள்ளார்.

2015 முதல் 2025 வரை கனடாவின் பிரதமராகப் பணியாற்றிய ட்ரூடோ, தமது ஒரு தசாப்த கால ஆட்சி அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும், எதிர்காலப் பொதுக் கொள்கைகளை மேம்படுத்த இணைந்து செயல்படவும் ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வருங்காலப் பொதுத் தலைவர்களாக உருவாகும் மாணவர்களுக்கு ட்ரூடோவின் அனுபவம் பெரும் பயனுள்ளதாக அமையும் என பிளவாட்னிக் பள்ளியின் முதல்வர் நைரே வூட்ஸ் (Ngaire Woods) வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியில் ட்ரூடோ ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு நேரில் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleகியூபெக்கில் அடுத்தடுத்து தீ வைப்புச் சம்பவங்கள்: உணவகம் முற்றிலும் எரிந்து சாம்பல்!
Next articleஅமெரிக்க இடைத்தேர்தல் வெற்றி: கனடாவுடனான உறவு சீராகும் என கனடாவாழ் அமெரிக்கர்கள் நம்பிக்கை!