ரொண்டோவின் ஏஜாக்ஸ் பகுதியில் 14 வயது சிறுமியை பல நாட்கள் கட்டாயமாக தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஏஜாக்சைச் சேர்ந்த 30 வயது இளைஞன் சந்தேகத்தின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Gowryshankar Kathirkamanathan என்ற இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஹாமில்டனில் இருந்து குறித்த சிறுமியை ஏமாற்றி ஏஜாக்ஸுக்கு அழைத்து சென்று, பல நாட்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை தடுத்து வைத்தமை, பாலியல் வன்கொடுமை செய்தமை, மிரட்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்த இளைஞன் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
எனினும், இந்த குற்றச்சாட்டுக்கள் இன்னமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றும் குறித்த இளைஞன் விசாரணைக்காக தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு வழங்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
வழங்கப்படும் தகவல்களின் இரகசியம் பேணப்படும் என்றும் உரிய தகவல் வழங்குவோருக்கு 2,000 டொலர்கள் வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.