எட்டோபிகோ (Etobicoke) பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஆடவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணியளவில் Scarlettwood Court மற்றும் Scarlett Road சந்திப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு ஆணொருவரை மீட்டனர்.
அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின், உடனடியாக அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு (Trauma Center) கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தமைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்த விபரங்களை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.
சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










