எடோபிகோக் பகுதியில் நடந்த தொடர் வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் கிப்லிங் அவென்யூ அன்ட் எக்லிங்டன் அவென்யூ வெஸ்ட் சந்திப்பில் நடந்தது. ஒரு பேருந்து மற்றும் இரண்டு கார்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
விபத்தில் சிக்கிய பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது.
விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.