டொரண்டோவில் உறைபனி மற்றும் பனிப் புயலினால் 4 லட்த்திற்கும் அதிகமான வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனினும், மின் விநியோகத்தை சீர்செய்யும் பணிகள் முழுவீச்சில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 4 லட்சம் வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்குமான மின் விநியோகம் திங்கட்கிழமை மாலை வரை தடைப்பட்டிருப்பதாக Hydro One நிறுவனம் அறிவித்துள்ளது.
மின் விநியோகத்தை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர இன்னும் ஒரு சில தினங்கள் தேவைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உறை பனி மற்றும் பனிப் புயலினால் 38 வீதிகள் மூடப்பட்டதுடன் மத்திய ஒன்டாரியோவில் இதன் பாதிப்பு அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததாகவும், மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து வீடுகள், வாகனங்கள் மீது விழுந்ததால் பெருமளவு சேதமப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.