இரும்பு, அலுமினியம் மற்றும் செம்பு இறக்குமதி வரி விதிப்பில் திருத்தம் – டொனால்ட் டிரம்ப் புதிய உத்தரவு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), செம்பு (Copper), அலுமினியம் (Aluminum) மற்றும் இரும்பு (Iron) ஆகிய உலோகங்களின் இறக்குமதி வரி விதிப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான புதிய பிரகடனத்தில் திங்கள்கிழமை கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை White House தெரிவித்துள்ளது.

இந்த புதிய உத்தரவின்படி, சில விவசாய உபகரணங்களுக்கான (Agricultural equipment) இறக்குமதி வரி 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புல்டோசர்கள் (Bulldozers) மற்றும் போர்க்லிப்ட்கள் (Forklifts) போன்ற நடமாடும் தொழிற்துறை உபகரணங்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை White House தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் மூலதன உபகரணங்களின் எடையில் குறைந்தது 85 சதவீதம், அமெரிக்காவில் உருக்கி வார்க்கப்பட்ட இரும்பு அல்லது அலுமினியத்தைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு 10 சதவீத சலுகை வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தொழிற்துறை கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கும், குறுகிய கால முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் இந்த வரி மாற்றங்கள் 2027 டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles