கனடாவிலிருந்து பிரிந்து செல்வது தொடர்பான வாக்கெடுப்பில் ஆல்பர்ட்டா (Alberta) மக்கள் கனடாவுடன் இணைந்திருக்கவே வாக்களித்துள்ளனர்.
எனினும், இதைத் தற்போதைய சூழ்நிலைகளுக்கான ஒப்புதலாக மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என முன்னாள் கன்சர்வேடிவ் Damien C. Kurek தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டா மாகாணப் பிரதமர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) முன்வைத்த மற்ற ஒன்பது கோரிக்கைகளுக்கும் மக்கள் ஆதரவளித்துள்ளதன் மூலம், மத்திய அரசிடம் தங்களுக்குள்ள அதிருப்தியைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் Pierre Poilievre மற்றும் பிரதமர் மார்க் (Mark Carney) ஆகிய இருவருமே ஆல்பர்ட்டா மக்களின் நியாயமான ஆதங்கங்களைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வளங்களின் வளர்ச்சி, அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி மத்திய அரசு உடனடியாகச் செயல்படத் தவறினால், எதிர்காலத்தில் இந்த நிலைமை மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
