ஆன்லைன் பயங்கரவாத வலையில் சிக்கிய சிறுமி தற்கொலை – ‘764’ குழுமம் குறித்து தந்தை பகீர் எச்சரிக்கை!

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Jason Sokolowski என்ற தந்தை, தனது 15 வயது மகள் பெனிலோப் (Penelope), ‘764’ எனப்படும் ஆபத்தான ஆன்லைன் பயங்கரவாதக் குழுவினால் மூளைச்சலவை செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்து, மற்ற பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது சிறுவர்களைக் குறிவைத்து இயங்கும் ஒரு பரவலாக்கப்பட்ட ஆன்லைன் பயங்கரவாத வலையமைப்பாகும்.

Minecraft மற்றும் Roblox போன்ற கேமிங் தளங்கள் மூலம் பெனிலோப்பைத் தொடர்பு கொண்ட இந்தக் குழு, அவளைச் சுய-பாதிப்பு (Self-harm) செய்து கொள்ளவும், வீட்டில் உள்ள வளர்ப்புப் பிராணிகளைக் கொல்ல முயலவும் தூண்டியுள்ளது.

இந்தக் குழுவின் கட்டாயத்தால் பெனிலோப் பலமுறை தற்கொலைக்கு முயன்றதுடன், அவை Twitch அல்லது Discord தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டிருக்கலாம் எனவும் அவரது தந்தை கவலை தெரிவித்துள்ளார்.

பெனிலோப் தனது 16-வது பிறந்தநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, 2025 பிப்ரவரியில் தற்கொலை செய்து கொண்டார்.

இக்குழுவின் சித்தாந்தத்தைப் பரப்பியது மற்றும் சிறுவர்களைக் கவர முயன்றது தொடர்பாக கியூபெக் (Quebec) பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஜெப்ரி ரூசல் (Jeffrey Roussel) என்பவரை RCMP பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

“சிறுவர்களிடம் மது அல்லது துப்பாக்கிகளைக் கொடுப்பதை விடவும் சமூக வலைதளங்கள் ஆபத்தானவையாக மாறிவருகின்றன” என்று Jason எச்சரித்துள்ளார்.

கனடா ஏற்கனவே ‘764’ குழுமத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles