அமெரிக்காவிற்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடா பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

அமெரிக்காவிற்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கனடியர் மீது சுமத்தப்பட்டுள்ள நெருக்கடிகள் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பயண அறிவுரையை குறித்த அமைப்பு வழங்கியுள்ளது.

”இது எங்கள் அமைப்பு வெளியிட்ட முதல் பயண எச்சரிக்கை. அமெரிக்க எல்லைப் பகுதியில் அரசியல் ரீதியில் மனிதர்களிடம் சோதனை அதிகரித்துள்ளது. டிரம்ப் அரசுக்கு எதிராக கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் இதனால் பாதிக்கப்படலாம். எனவே, இந்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளோம்.” Canadian Association of University Teachers அமைப்பின் தலைவர் டேவிட் ரொபின்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் நெருக்கமான அரசியல் உறவு இல்லாத நாடுகளைச் சேர்ந்தவர், அமெரிக்க அரசின் நிலைக்கு எதிராக களத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் தேவையற்ற பயண எச்சரிக்கையைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கல்வியாளர்கள் தங்கள் மின்னணு சாதனங்களில் உள்ள முக்கிய தகவல்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் குறித்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles