ஸ்கார்பரோ மருத்துவமனை நிறுத்தத்தில் துப்பாக்கிச் சூடு: 70 வயது தம்பதி பரிதாப பலி!

கனடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் வாகன நிறுத்தத்தில் (Parking Lot) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 70 வயதான கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.

வார்டன் மற்றும் செயின்ட் கிளேர் அவென்யூஸ் (Warden and St. Clair avenues) அருகே அமைந்துள்ள புரொவிடென்ஸ் ஹெல்த்கேர் (Providence Healthcare) மருத்துவமனை வளாகத்தில் பிற்பகல் 12:30 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இருவருக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேறு சந்தேகநபர்கள் எவரும் தேடப்படவில்லை என்றும், எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் ரொறன்ரோ பொலிஸ் அதிகாரி ஸ்காட் ஷட் (Scott Shutt) தெரிவித்துள்ளார்.

றொரண்டோ பொலிஸாரின் கொலைப் பிரிவு (Toronto Police Homicide Unit) இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகம் பாதுகாப்பாக உள்ளதாகவும், நோயாளிகளுக்கான வழக்கமான சேவைகள் மற்றும் முன்பதிவுகள் தடையின்றித் தொடரும் என்றும் ‘யூனிட்டி ஹெல்த் றொரண்டோ (Unity Health Toronto) நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

குடும்பத்தினருக்குப் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து மேல்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles