வெள்ளோட்டத்தில் வென்றார் விஜய் – எம்ஜிஆரின் சாதனையும் முறியடிப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக கூட்டணி 76, அதிமுக கூட்டணி 50 தொகுதிகளை வசப்படுத்துகின்றன.

திமுக 2-ம் இடத்தில் உள்ளது. முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின் சொந்தா தெகாகுதியான கொளாத்தூரில் தோல்வியை சந்தித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது திமுகவின் கோட்டை எனப்படும் சென்னை அதன் அனைத்து தொகுதிகளையும் தவெகவிடம் இழந்திருக்கிறது.

அதேபோல் தெற்கு, மேற்கு, வடக்கு, டெல்டா என அனைத்து மண்டலங்களிலும் தவெக கோலோச்சியிருக்கிறது.

இந்த வெற்றியின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்துள்ளார்.

977 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட எம்ஜிஆரின் அதிமுக 33.52 சதவீத வாக்குகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது.

இந்நிலையில் 2026 தேர்தலில் விஜய்யின் தவெக இதுவரை (மாலை 6.30 மணி நிலவரம்) 34.89 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதன்மூலமாக எம்ஜிஆரின் சாதனையை விஜய் முறியடித்துள்ளார்.

இதனிடையே விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles