வெளிநாடு செல்லும் கனடியர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் சுகாதார சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சில நாடுகளுக்கு கனடா அரசு பயண எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் ‘உயர் எச்சரிக்கை நிலை’ அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோ மற்றும் பஹாமாஸ் நாடுகளில் குற்றச்செயல்கள் மற்றும் கடத்தல்கள் அதிகரித்து வருவதால் ‘மிகுந்த கவனத்துடன் பயணம் செய்ய’ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சிறிய திருட்டுகள், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், காசா, மேற்கு கரை ஆகிய நாடுகளில் நிலவும் போர் சூழல் நிலவுவதால் ‘அத்தியாவசியமல்லாத பயணங்களை தவிர்க்குமாறு’ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈக்வடார், பெரு, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கும்பல் வன்முறை, கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம் போன்றவற்றால் சில பகுதிகளில் பயணங்களைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சட்டங்கள் கடுமையாக அமுலாக்கம், நிலவும் ஒழுங்குகள் குறித்து கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜமைக்கா நாட்டில் சுற்றுலா பகுதிகளில் கொலை, துப்பாக்கிச் சூடு, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.