வாகனக் கொள்ளையுடன் தொடர்புடைய க்யுபெக்கைச் சேர்ந்த 11 பேர் கைது!

வாகனக் கொள்ளையுடன் தொடர்புடைய 11 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினர் 38 வாகனங்களை திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் பெறுமதி சுமார் 2.5 மில்லியன் டொலர்கள் எனவும் இவற்றில் 20 வாகனங்கள் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் மீது சுமார் 160 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

டொரோண்டோவில் இவர்கள் இந்தக் கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்தக் குழுவினர் மிகவும் திட்டமிட்ட வகையில் கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இவர்கள் நாடுகளுக்கிடையிலான எல்லைகளை பொருட்படுத்தாமல் செயல்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles