றொரண்டோ சிறையில் கொடூரம் – 80 வயது முதியவர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி!

றொரண்டோ (Toronto) சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த லூதர் பிப்பி (Luther Pippy) என்ற 80 வயது முதியவர், அவரது அறைத்தோழனால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் கனடாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

றொரண்டோ சமூக வீட்டுவசதி வளாகத்தில் (Toronto Community Housing Complex) பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் வைத்து லூதர் பிப்பி கைது செய்யப்பட்டார்.

மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர், றொரண்டோ சவுத் தடுப்புக்காவல் மையத்தில் (Toronto South Detention Centre) உள்ள சிறப்புத் தேவைகள் பிரிவில், டக்ளட்ஸ் டெஸ்ட்ருசியன்ஸ்-டுமெஸ்னில்ஸ் (Douglats Destruzions-Dumesnils) என்ற 50 வயது நபருடன் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் 12 அன்று, அறைத்தோழனான டெஸ்ட்ருசியன்ஸ் கொடூரமான முறையில் முதியவரைத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் முதியவர் லூதர் பிப்பி தனது பார்வையை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது குற்றவாளி மனநல மருத்துவமனை ஒன்றில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஒன்டாரியோ என்.டி.பி (Ontario NDP) நீதிக்கான விமர்சகர் கிறிஸ்டின் வாங்-டாம் (Kristyn Wong-Tam), கவலை தெரிவித்துள்ளார்.

சிறைகளில் உள்ள கடுமையான மனநல நோயாளிகளுக்கு முறையான மருத்துவப் பாதுகாப்பு வழங்க ஒன்டாரியோ அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் இது குறித்து ஒன்டாரியோவின் தலைமை வழக்கறிஞர் அமைச்சகம் (Ministry of the Solicitor General) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles