றொரண்டோ வின் ஸ்காபரோ சவுத்வெஸ்ட் (Scarborough Southwest) தொகுதி கவுன்சிலர் பார்த்தி கந்தவேல் (Parthi Kandavel), ஒன்ராறியோ மாகாண பொலிஸாரின் (OPP) விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பார்த்தி கந்தவேல், தன் மீதான சில புகார்கள் தொடர்பாக OPP விசாரணை நடத்தி வருவதை அறிந்து “வியப்படைந்ததாக”க் குறிப்பிட்டுள்ளார்.
“இது கடினமான செய்தி என்பதை நான் அங்கீகரிக்கிறேன், இந்தச் சூழலை விரைவில் சரிசெய்ய நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்காபரோ சவுத்வெஸ்ட் மக்களின் நம்பிக்கையைப் பெற கடுமையாக உழைத்துள்ளதாகவும், நேர்மை மற்றும் நற்பண்புகளின் உயர்ந்த தரத்தைப் பேண விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பார்த்தி கந்தவேல், முன்னாள் ரொறன்ரோ மாவட்ட பாடசாலைச் சபை (TDSB) அறங்காவலராக இருந்தவர்.
2023 நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ரொறன்ரோ மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தன்மை குறித்து தற்போது தான் அறிந்து வருவதாகவும், மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.










