றொரண்டோவில் லித்தியம்-அயன் மின்கல வெடிப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு – தீயணைப்புப் படைத் தளபதி எச்சரிக்கை!

றொரண்டோ (Toronto) நகரில் லித்தியம்-அயன் மின்கலங்களால் (Lithium-ion battery) ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கையும் அதன் தீவிரமும் கணிசமாக அதிகரித்துள்ளதாக, நகரின் தீயணைப்புப் படைத் தளபதி ஜிம் ஜெசோப் (Jim Jessop) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்சார மிதிவண்டிகள் (e-bikes) மற்றும் ஸ்கூட்டர்களில் (e-scooters) பயன்படுத்தப்படும் இம்மின்கலங்கள், ‘வெப்ப ஓட்டம்’ (thermal runaway) எனப்படும் நிலையை எட்டும்போது, வெறும் 90 செக்கன்களுக்குள் நச்சுப் புகையை வெளியிட்டு அறை முழுவதையும் தீக்கிரையாக்கும் ஆபத்து கொண்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், றொரண்டோவில் இத்தகைய தீ விபத்துகள் சுமார் 600 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அண்மைய வாரத்தில் மட்டும் ரோன்செஸ்வெல்ஸ் அவென்யூ (Roncesvalles Avenue), கீல் ஸ்ட்ரீட் (Keele Street) மற்றும் வெல்லஸ்லி ஸ்ட்ரீட் ஈஸ்ட் (Wellesley Street East) உள்ளிட்ட பகுதிகளில் இ-பைக்குகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மூன்று மின்கல வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இணைய வழியில் எளிதாக வாங்கக்கூடிய இந்த மின்கலங்களை முறைப்படுத்துவதற்கான எவ்வித முறையான சட்ட விதிகளும் தற்போது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles