ரொரன்ரோ தேர்தலில் வாக்காளர்கள் புதிய சாதனை! முன்கூட்டியே 2.22 இலட்சம் பேர் வாக்களிப்பு!

cp24

ரொரன்ரோ மாநகர சபைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பில் இம்முறை வரலாறு காணாத அளவிற்கு மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெற்ற ஆறு நாட்கள் முன்கூட்டிய வாக்களிப்பில், மொத்தமாக 2 இலட்சத்து 22 ஆயிரத்து 550 பேர் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இது 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகர சபைப் பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும்.

2022ஆம் ஆண்டு சுமார் ஒரு இலட்சத்து 16 ஆயிரம் பேரும், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற மேயர் இடைத்தேர்தலில் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேரும் முன்கூட்டியே வாக்களித்திருந்தனர்.

குறிப்பாக, ஒக்டோபர் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டும் 53 ஆயிரத்து 363 பேர் வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

ரொரன்ரோ நகரங்கள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர், ஒரே நாளில் முன்கூட்டியே பதிவான அதிகூடிய வாக்குகள் இதுவாகும்.

இதற்கு முன்னர், 2023ஆம் ஆண்டில் ஒரே நாளில் 38 ஆயிரத்து 621 பேர் வாக்களித்ததே சாதனையாக இருந்தது.

இந்த அதிகரிப்பு, இம்முறை மாநகர சபைத் தேர்தலில் வாக்காளர்களின் பங்கேற்பு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

ரொரன்ரோ மாநகர சபைத் தேர்தலுக்கான பிரதான வாக்களிப்பு எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிப்பு நிலையங்கள் திறந்திருக்கும்.

முன்கூட்டியே வாக்களிக்காத தகுதியுள்ள வாக்காளர்கள், தேர்தல் தினத்தில் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற முடியும்.

Previous articleCanada’s Wonderland இல் இரண்டு முக்கிய Roller Coasterகள் திடீர் மூடல்! காரணம் என்ன?
Next articleகனடாவில் அதிகரிக்கும் 5 மளிகைப் பொருட்களின் விலை!