மிசிசாகாவில் மீண்டும் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியவர் கைது – 14 நாட்களுக்கு வாகனம் பறிமுதல்!

ஒன்றாரியோவின் வுட்ஸ்டாக் (Woodstock) பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மிட்செல் ஹண்டர் (Mitchel Hunter) என்ற இளைஞர், மிசிசாகா (Mississauga) பகுதியில் அதிவேகமாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் (Stunt driving) பீல் பிராந்திய பொலிஸாரால் (Peel Regional Police) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 23 அன்று அதிகாலை 1:00 மணியளவில், வின்ஸ்டன் சர்ச்சில் பவுல்வார்ட் (Winston Churchill Boulevard) மற்றும் அர்ஜெண்டியா வீதி (Argentia Road) சந்திப்புக்கு அருகில், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகம் அனுமதிக்கப்பட்ட பாதையில், 102 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த போதே இவர் பிடிபட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் மீது அபாயகரமான முறையில் வாகனத்தை செலுத்தியமை, ஓட்டுநர் உரிமத்தை சமர்ப்பிக்காமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவரது சாரதி உரிமம் 30 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு, வாகனம் 14 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிராம்ப்டன் (Brampton) பகுதியில் இடம்பெற்ற மரணத்தை ஏற்படுத்திய விபத்து வழக்கு தொடர்பில் நீதிமன்ற விசாரணைக்காக காத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles