கனடாவின் Niagara பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், St. Catharines மற்றும் Lincoln நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது!
St. Catharines பகுதியில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளின் கீழ்தளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், உடைமைகளுக்கும் நகரின் உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
Lincoln பகுதியில் கடந்த மூன்று வாரங்களில் ஏற்பட்ட மூன்று மழைப் புயல்களின்போது, மொத்தமாக 300 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. வீடுகள் மட்டுமன்றி, விவசாய நிலங்கள், பயிர்கள் மற்றும் பசுமைக்குடில்களும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள நகர வளங்களால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால், வெளி உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக நகர நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளநீர் நிறைந்த வீதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளைத் தவிர்த்து, அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
