பொதி அனுப்பும் சேவை என நம்பி போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கிய கனடிய யுவதி!

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று, இன்ஸ்டாகிராம் (Instagram) வாயிலாக கனடிய இளைஞர்களை ஏமாற்றி, அவர்களை போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தும் திடுக்கிடும் தகவல்கள் W5 புலனாய்வில் வெளியாகியுள்ளன.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஹொங்கொங்கில் (Hong Kong) சுமார் 100 கிலோ கொக்கைனுடன் நான்கு கனடியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்ராறியோவின் Cambridge பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் Jade, ஒரு சட்டபூர்வமான “சர்வதேச பொதி அனுப்பும்” (International package shipper) வேலை என நம்பி இதில் இணைந்துள்ளார்.

ஒரு பயணத்திற்கு $5,000 சம்பளம் மற்றும் இலவச விமானப் பயணச் சீட்டு என ஆசை காட்டப்பட்டுள்ளது.

இது சட்டவிரோதமானது இல்லை எனத் தூண்டில் போட்ட கடத்தல் கும்பல், DOT என்ற பெயரில் இயங்கும் ஒரு மர்ம நபரின் கீழ் இயங்கியது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரும் ஒருவரையொருவர் அறியாதவர்கள் என்றாலும், அவர்கள் அனைவரும் ஒரே தந்திரமுறையைப் பயன்படுத்தித் தூண்டப்பட்டுள்ளனர்.

ஹொங்கொங்கில் கொக்கைனின் விலை கனடாவை விட இருமடங்கு அதிகம் என்பதால் அங்குக் கடத்தல்கள் அதிகரிக்கின்றன.

தற்போது இவர்கள் நால்வரும் ஹொங்கொங் சட்டப்படி ஆயுள் தண்டனையை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர்.

Video thumbnail
எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க நபர் தற்கொலை!
01:15
Video thumbnail
ஒன்ராறியோவில் உயர்கல்வி புரட்சி - 6.4 பில்லியன் டொலர் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடு!
01:34
Video thumbnail
றொரண்டோ TTC பேருந்தில் தாக்குதல் - சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்!
00:38
Video thumbnail
றொரண்டோவின் புதிய EDGE ஊக்கத் திட்டம் - முதல் பயனாளியாக நோர்த் யோர்க் நிறுவனம் தெரிவு!
01:09
Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10

Related Articles

Latest Articles