பேச்சுவார்த்தை தொடரும் நிலையில் கனடா Post பணியாளர்கள் வேலை நிறுத்தம்!

கனடா போஸ்ட் நிறுவனத்தில் 55,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தேசிய அளவில் மேலதிக நேரத்தில் பணியாற்றவதை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், கனடிய தபால் பணியாளர் சங்க பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்படும் வரையில மேலதிக நேர பணிப்புறக்கணிப்புத் தொடரும் என்று தபால் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

வேலைநிறுத்தத்தால் பொதி விநியோக அளவு 50% குறைந்துள்ளது என்றும் இது கனடா பொருளாதாரத்தையே பாதிக்கும் நிலைக்கு வந்துள்ளது என்றும் கனடா போஸ்ட் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles