புயலால் Rogers Stadium கடும் சேதம் — Toronto AC/DC இசை நிகழ்ச்சி ரத்து!

Toronto-வில் நடைபெறவிருந்த உலகப் புகழ்பெற்ற AC/DC இசைக்குழுவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16ஆம் திகதி Rogers Stadium-ல் நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சி, கடந்த வாரம் Toronto-வை தாக்கிய கடுமையான புயலால் stadium-க்கு ஏற்பட்ட பாரிய சேதத்தைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக Live Nation Canada அறிவித்துள்ளது.

புயலுக்குப் பின்னர் City of Toronto உடன் இணைந்து பொறியாளர்கள் மேற்கொண்ட முழுமையான ஆய்வில், stadium-ன் சில பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதும், அவற்றை முழுமையாக அகற்றி மீண்டும் கட்ட வேண்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால் தற்போது ரசிகர்களை பாதுகாப்பாக அனுமதிக்கும் நிலையில் Rogers Stadium இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள், கலைஞர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்பதால், வேறு ஒரு இடத்தை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வெற்றியளிக்காத நிலையில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Rogers Stadium-ன் சேதமடைந்த பகுதிகளை அகற்றி மீண்டும் கட்டும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படவுள்ளன.

Related Articles

Latest Articles