Peel பகுதியில் திட்டமிட்ட முறையில் இடம்பெற்றதாக கூறப்படும் திருட்டுகள் தொடர்பான விசாரணையில், சுமார் 15,000 டொலர் மதிப்பிலான திருடப்பட்ட பொருட்களை பொலிசார் மீட்டுள்ளதுடன், நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
June 18ஆம் தேதி Mississauga-வில் Clayhill Road மற்றும் Dundas Street West பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக Peel Regional Police விசாரணையை ஆரம்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து, Brampton-ல் Mississauga Road மற்றும் Mayfield Road பகுதிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு வணிக நிறுவனங்களில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 15,000 டொலர் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.
Department stores, pharmacies, fitness stores ஆகியவை இலக்காகக் கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து Brampton-ஐ சேர்ந்த 43, 47, 21, 20 வயதுடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
