பிராம்ப்டன் Stellantis ஆலையை விற்பனை – 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

citynews

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ‘ஸ்டெல்லாண்டிஸ்’ (Stellantis), இயங்காமல் முடங்கியுள்ள தனது பிராம்ப்டன் (Brampton) வாகன உற்பத்தி ஆலையை பாதுகாப்பு உபகரண தயாரிப்பு நிறுவனமான ‘ரோஷல்’ (Roshel) நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிராம்ப்டன் ஆலையை கையகப்படுத்தும் ‘ரோஷல்’ நிறுவனம், அங்கு மேம்பட்ட உற்பத்தி மையத்தை உருவாக்கவுள்ளதுடன், பணிநீக்கம் செய்யப்பட்ட சுமார் 700 முதல் 1,000 ஸ்டெல்லாண்டிஸ் ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், பாதுகாப்புத் துறை தொழில்நுட்பங்களில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் முடிவுக்கு வராத நிலையில், இந்த விற்பனை ஒப்பந்தம் ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என தொழிற்சங்கமான ‘யுனிபோர்’ (Unifor) கடுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும், வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் நிறுவனத்தின் பொறுப்பு என்றும், இது தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) தெரிவித்துள்ளார்.

Previous articleநிதித்துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த கனடா – சீனா ஒப்பந்தம்!
Next articleகனடாவில் துப்பாக்கிகளுக்கான தடைக்கு எதிராக வழக்கு!