கனடா பிரதமர் Mark Carney-க்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், Montreal-ஐ சேர்ந்த 51 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
Marc-André Porlier என்ற நபர், ஒரு Canadian senator மற்றும் மேலும் சிலருக்கு அனுப்பிய email ஒன்றில் இந்த மிரட்டல்களை வெளியிட்டதாக RCMP குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் திகதி விசாரணையை ஆரம்பித்த RCMP, சந்தேகநபரை விரைவாக கைது செய்து ஆகஸ்ட் 8ஆம் திகதி Montreal நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
அவர் மீது மரணம் அல்லது உடல் பாதிப்பை ஏற்படுத்துவதாக மிரட்டிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான மிரட்டல்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், வன்முறை மிரட்டல்கள் criminal charges-க்கு வழிவகுக்கலாம் என்றும் RCMP எச்சரித்துள்ளது.
