பியூஸ் துப்பாக்கிச் சூடு – வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட பிராம்ப்டன் இளைஞர் கைது!

வாழ்நாள் முழுவதும் துப்பாக்கி வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்ட 24 வயதுடைய பிராம்ப்டன் (Brampton) இளைஞர் ஒருவர், மிசிசாகா (Mississauga) பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொர்பிராம் (Torbram) வீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய அந்த இளைஞரை பொலிஸார் மறித்தபோது, அவர் தப்பியோடி பொலிஸாரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். எனினும், அதிர்ஷ்டவசமாக பொலிஸ் அதிகாரி காயமின்றி தப்பினார்.

மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு, ஐசையா பச்சூ (Isaiah Bachoo) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையின் போது ஏற்பட்ட காயங்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இச்சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

ஏற்கனவே பல நீதிமன்ற துப்பாக்கித் தடைகளைத் மீறியுள்ள இவர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் தடைசெய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர பொலிஸார் ஆலோசித்து வருகின்றனர்.

Video thumbnail
றொரண்டோ பிபா உலகக்கிண்ண வலயங்களில் ட்ரோன் பறக்கவிட்ட நபர் மீது குற்றச்சாட்டு!
01:23
Video thumbnail
றொரண்டோ ஃபிபா உலகக்கிண்ண வலயங்களில் ட்ரோன் பறக்கவிட்ட நபர் மீது குற்றச்சாட்டு!
01:03
Video thumbnail
பியூஸ் துப்பாக்கிச் சூடு - வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட பிராம்ப்டன் இளைஞர் கைது!
00:52
Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08

Related Articles

Latest Articles