பிக்கரிங் படுகொலை – 83 வயது மூதாட்டியை கத்தியால் குத்திக் கொன்ற  இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

கனடாவின் பிக்கரிங் நகரில்  83 வயது மூதாட்டி எலினோர் டோனி (Eleanor Doney) என்பவரை, கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் 14 வயது வாலிபர் தற்போது முதலாம் நிலை கொலைக் குற்றத்தை (1st-degree murder) ஒப்புக்கொண்டுள்ளார்.

2025 மே மாதம் தனது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது குறித்த மூதாட்டி கொலைச் செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த இளைஞர் கொலை செய்வதற்கு முன்னரே பல வாரங்களாகவே வன்முறை எண்ணங்களை வளர்த்து வந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் தொடர் கொலையாளிகள், உளவியல் கோளாறுகள் குறித்துத் தீவிரமாகத் தேடியதும், ஒரு அனிமே (Anime) கதாபாத்திரத்தைப் போலச் செயல்பட முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மே 29, 2025 அன்று, தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த எலினோர் டோனியைப் பேச்சுக்கொடுப்பது போல அணுகிய அந்த இளைஞர், திடீரெனத் தனது பையில் வைத்திருந்த கத்தியால் அவரைத் தாக்கியுள்ளார்.

அவர் பயன்படுத்திய கத்தி மற்றும் சம்பவத்தின் போது அணிந்திருந்த உடைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், அவர் தனது பள்ளியில் ஒரு ஆசிரியரைத் தாக்கியதற்காக ஒரு நாள் முன்பே இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles