நோவா ஸ்கோட்டியா கடலில் உள்ள மீன்கள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

கனடாவின் நோவா ஸ்கோட்டியா (Nova Scotia) மாகாணக் கடற்பரப்பில், வழக்கத்திற்கு மாறாக வெப்பமண்டல மீன்கள் (Tropical Fish) அதிகளவில் தென்படுவது விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகக் கரீபியன் போன்ற வெப்பமான கடல் பகுதிகளில் வாழும் cornetfish மற்றும் spotfin butterflyfish போன்ற மீன்கள் தற்போது நோவா ஸ்கோட்டியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் காரணமாக இந்த மீன்கள் வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாக Dalhousie University பேராசிரியர் Boris Worm தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், குளிர்காலக் கடும் குளிரைத் தாங்க முடியாமல் இந்த மீன்கள் இறந்துவிட்டாலும், எதிர்காலத்தில் இவை உள்ளூர் கடல் சார் சூழலை மாற்றியமைக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இத்தகைய புதிய வகை மீன்களின் வருகை, உள்ளூர் மீன்களுக்குப் புதிய உணவாக அமையலாம் என்றாலும், இவை புதிய வகை ஒட்டுண்ணிகளைக் (Parasites) கொண்டு வரக்கூடும் என்பதால் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என DFO விஞ்ஞானி Ryan Stanley குறிப்பிட்டுள்ளார்.

மரபணு சோதனை (environmental DNA) மூலம் இந்தப் புதிய மாற்றங்களை விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles