நோர்த் யோர்க் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – இருவர் படுகாயம்!

கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக றொரண்டோ (Toronto) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குப் பிறகு Jane Street மற்றும் Sheppard Avenue East சந்திப்புப் பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் இருந்த இருவரை மீட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கேயே மற்றொரு நபர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

CP24 ஊடகத்திற்கு அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, கொலைப் புலனாய்வுப் பிரிவினர் (Homicide Unit) தற்போது இந்த விசாரணைப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் 416-808-3100 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles