டொரோண்டோ நகர மத்தியில் உள்ள ஒரு கடையில் இரண்டு ஊழியர்களை தாக்கி, திருடிய பொருட்களுடன் தப்பிச் சென்றதாக கூறப்படும் பெண்ணை காவல்துறை தேடிவருகிறது.
மார்ச் 19ஆம் தேதி இரவு 9:10 மணியளவில், பே மற்றும் டண்டாஸ் ( Bay and Dundas) வீதி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காவல்துறை தகவலின்படி, சுமார் 20 வயதுடைய குற்றவாளி கடையில் நுழைந்து பல பொருட்களை ஒரு கூடையில் வைத்தார். பின்னர், அதை கடையின் முன்பகுதியில் விட்டுவிட்டு சென்றார். கடை ஊழியர் அந்த கூடையை எடுத்த போது, அந்த பெண் மீண்டும் கைப்பற்ற முயற்சி செய்ததாகவும், இந்தச் சண்டையில் ஊழியரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த பெண் கடை ஊழியர்களின் மீது அடையாளம் தெரியாத ஒரு திரவத்தை தெளித்து, இடத்தை விட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.