டொராண்டோ பகுதியில் தொடரும் Tow Truck மோதல்: கொலைச் சதி வழக்கில் மனோ சுப்பிரமணியம் கைது!

Toronto மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட காலமாக நிலவிவரும் Tow Truck தொழில் போட்டி மோதலில், ஸ்கார்பரோவை (Scarborough) சேர்ந்த முக்கிய நபரான Manoharan (Mano) Subramaniam (43) கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழில் போட்டி காரணமாக கொலைச் சதியில் ஈடுபட்டதாக இவருக்கு எதிராக இரண்டு கொலைச் சதி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இவருடன் சேர்த்து ஸ்கார்பரோவைச் சேர்ந்த Bryan Fedrol (41), மற்றும் விட்சர்ச்ச்-ஸ்டௌவிவில்லையை (Whitchurch-Stouffville) சேர்ந்த Vathsuthan Gobalakirishnan (43) ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Latest Articles