டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெருநகரப் பகுதிகளில் LCBO மதுபானக் கடைகளில் இருந்து, சுமார் $33,000 மதிப்புள்ள மதுபானங்களை திருடிய சம்பவம் தொடர்பாக நபர் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 27 முதல் ஏப்ரல் 4 வரை இந்த திருட்டு நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடைகளுக்கு சென்று, மதுபானங்களை எடுத்து, பணம் செலுத்தாமல் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
5 அடி 6 அங்குலம் உயரமுள்ள 150 பவுண்ட் எடையுள்ள நடுத்தர உடல் அமைப்பு நபர் ஒருவரையே பொலிசார் தேடி வருகின்றனர்.
குறித்த நபர் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.