டிரேக்கின் பனிச்சிற்பம் அகற்றம் – பாதுகாப்பு கருதி றொரண்டோ தீயணைப்புப் படை அதிரடி!

றொரண்டோ (Toronto) நகரின் மையப்பகுதியில் ராப்பர் டிரேக் (Drake) தனது புதிய ஆல்பத்தை விளம்பரப்படுத்த அமைத்திருந்த பிரம்மாண்ட பனிச்சிற்பம், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் தீயணைப்புத் துறையினரால் அதிரடியாக அகற்றப்பட்டது.

பனிக்கட்டிக்குள் மறைந்துள்ள ஆல்பம் வெளியீட்டுத் தேதியைக் கண்டறிய, நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர்.

சிலர் பனிக்கட்டியை உருக்க எரியக்கூடிய திரவங்கள் மற்றும் நெருப்பைப் பயன்படுத்தியதுடன், 25 அடி உயரமான அந்தச் சிற்பத்தின் மீது ஏறி நின்றதால் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டது.

றொரண்டோ தீயணைப்புத் தலைவர் ஜிம் ஜெசாப் (Jim Jessop) உத்தரவின் பேரில், தீயணைப்பு வீரர்கள் ஏரியல் டிரக் மூலம் வெந்நீரைப் பாய்ச்சி பனிக்கட்டியை உருக்கினர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.​

இதற்கிடையில், கிஷ்கா (Kishka) என்ற ட்விட்ச் ஸ்ட்ரீமர் (Twitch streamer) ஒரு சுத்தியலால் பனிக்கட்டியை உடைத்து, உள்ளே இருந்த பையை எடுத்தார்.

அதில் மே 15′ (May 15) என்ற ஆல்பம் வெளியீட்டுத் தேதியுடன், ஒரு புத்தகம் மற்றும் ஏராளமான $100 டொலர் தாள்கள் இருந்தன.

இந்தச் சிற்பத்தைச் சுற்றி மக்கள் கோடாரிகள் மற்றும் சுத்தியல்களால் பனிக்கட்டிகளை உடைத்து வீசியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles