டக் போர்ட் மற்றும் ஊடகவியலாளர்கள் இடையே காரசாரமான விவாதம்!

வீட்டுவசதித் துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில், ஒன்ராறியோ (Ontario) மாகாண முதல்வர் டக் போர்ட் (Doug Ford) மற்றும் ஊடகவியலாளர்கள் இடையே கடுமையான விவாதம் ஏற்பட்டுள்ளது.

மாகாண நாடாளுமன்றத்திற்கு 21 வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சமீபத்திய கருத்துக்கணிப்பில் டக் போர்ட் (Doug Ford) இன் மக்கள் ஆதரவு 21 சதவீதமாகக் குறைந்துள்ளதாக வெளியான தகவல் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால் அதிருப்தியடைந்த அவர், “இன்று தேர்தல் நடந்தால் நாங்கள் மீண்டும் ஒரு பிரம்மாண்ட பெரும்பான்மையுடன் (Super majority) ஆட்சியமைப்போம் என்றார்.

தேர்தல் நாளன்று மட்டுமே கருத்துக்கணிப்புகள் உண்மையானவை” என்றும் அவர் பதிலளித்தார்.

அத்துடன், தனது கட்சியின் உள்ளன கருத்துக்கணிப்பில் 41 சதவீத ஆதரவு இருப்பதாகக் கூறி, பில்லி பிஷப் றொரண்டோ சிட்டி ஏர்போர்ட் (Billy Bishop Toronto City Airport) விரிவாக்கத் திட்டம் மிகவும் பிரபலமானது என்றும் அவர் வாதிட்டார்.

தொடர்ந்து, ஸ்கார்பாரோ (Scarborough) தொம்சன் மெமோரியல் பூங்காவில் (Thomson Memorial Park) நடைபெற்ற போர்ட் பெஸ்ட்‘ (Ford Fest) குடும்ப விழாவில் OPSEU தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு, போராட்டக்காரர்கள் சிறுவர்கள் முன்னிலையில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி, விருந்தினர்களை அச்சுறுத்தியதாக போர்ட் (Ford) குற்றம் சாட்டினார்.

ஊடகவியலாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளால் பொறுமையிழந்த முதல்வர், “நீங்கள் அனைவரும் என்னை மேடைக்கு அழைத்ததில் இருந்து தொடர்ந்து தாக்கி மட்டுமே பேசுகிறீர்கள்” என்று சாடினார்.

 

Video thumbnail
கனடாவில் காணாமல் போயுள்ள தந்தை? தேட உதவுமாறு மகன் வேண்டுகோள்!
01:02
Video thumbnail
பிராம்ப்டனில் சோகம் - கட்டுமானப் பள்ளத்தில் விழுந்து நபர் உயிரிழப்பு!
00:49
Video thumbnail
கனடாவில் தக்காளி விலை 45% உயர்வு - நுகர்வோர் கடும் திண்டாட்டம்!
01:12
Video thumbnail
மொண்ட்ரியலில் நடந்தது பயங்கரவாத தாக்குதலா? பொலிஸார் விளக்கம்
00:54
Video thumbnail
Lionel Messi உலகக் கிண்ண சாதனையும் சவால்களும் உலகக் கிண்ணத்தின் சுவாரஸ்யமான தகவல்களும்!
27:25
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை வீழ்ச்சி - இந்த நிம்மதி நீடிக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை!
01:13
Video thumbnail
கனடாவில் கொடூரக் கொலை - 25 வயதுப் பெண்னைத் தேடும் பொலிஸார்!
00:55
Video thumbnail
ஜி.டி.ஏ புதிய வீட்டு விற்பனையில் முன்னேற்றம் - பின்னடைவைச் சந்திக்கும் காண்டோ சந்தை!
01:23
Video thumbnail
றொரண்டோ ஃபிபா உலகக்கிண்ண வலயங்களில் ட்ரோன் பறக்கவிட்ட நபர் மீது குற்றச்சாட்டு!
01:03
Video thumbnail
பியூஸ் துப்பாக்கிச் சூடு - வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட பிராம்ப்டன் இளைஞர் கைது!
00:52

Related Articles

Latest Articles