ஜாக்பாட் அதிர்ஷ்டம் – GTA ஊழியர்கள் ஐவர் $60 மில்லியன் வென்றனர்!

“நான் பார்க்கிங் லொட்டில் இருந்தபோது தகவல் வந்தது. முதலில் நகைச்சுவை என நினைத்தேன். ஆனால் உண்மை என்று உறுதிப்படுத்தியதும் கை நடுங்கியது, மகிழ்ச்சியில் அழுதேன்” என கூட்டாக 60 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வென்ற GTA பணியாளர் தெரிவித்துள்ளார்.

GTA ஐ சேர்ந்த ஐந்து பணியாளர்கள், லுனார் புதுவருடத்தை முன்னிட்டு வாங்கிய லாட்டரி சீட்டின் மூலம் $60 மில்லியன் லொட்டோ மேக்ஸ் (Lotto Max) ஜாக்பாட் வென்றுள்ளனர்.

ஜனவரி 21-ஆம் திகதி நடந்த லொட்டோ மேக்ஸ் ஜாக்பொட்டில் குழுவொன்று பரிசை வென்றதாக OLG (Ontario Lottery and Gaming Corporation) அறிவித்துள்ளது.

மிஸிசாகாவைச் சேர்ந்த Trang Pham, “லூனார் புதுவருடத்தை முன்னிட்டு ஐவர் கொண்ட தமது ஊழியர் குழுவின் சார்பாக ஒரு சீட்டு வாங்கலாம் எனத் தோன்றியது” என கூறினார்.

வெற்றி அறிவிப்பை மறுநாள் செய்திகளில் பார்த்தபோது தான் தாம் வென்றதை அவர் உணர்ந்தார்.

Soung Tran (Mississauga), Phong Phan (Brampton), Thuc Le (Toronto), Zou Hsieh (Scarborough) Trang Pham (Mississauga) ஆகிய ஐவருக்கு இந்த வெற்றி தொகை சமமாக பங்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் $12 மில்லியன் பெற்றுள்ளனர். அவரவர் ஆசைப்படி பணத்தை செலவிடத் திட்டமிட்டுள்ளனர்.

“நான் பார்க்கிங் லாட்டில் இருந்தபோது தகவல் வந்தது. முதலில் நகைச்சுவை என நினைத்தேன். ஆனால் Trang உண்மை என்று உறுதிப்படுத்தியதும் கை நடுங்கியது, மகிழ்ச்சியில் அழுதேன்” என Soung Tran தெரிவித்தார்.

Zou Hsieh மற்றும் Thuc Le கூறுகையில், “இதை நம்ப முடியவில்லை. வெற்றியின் மகிழ்ச்சியில் சில நாட்கள் நிம்மதியாக உணவோ, உறங்கவோ முடியவில்லை.”

அதிர்ஷ்டம் ஒன்று வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதற்கான மற்றுமொரு சாட்சியம்!

Video thumbnail
குறைந்த வருமானமுடைய கனேடியருக்கு Automatic Tax Filing திட்டம்!
01:26
Video thumbnail
கனடா போஸ்ட் சுழற்சி முறையில் வேலை நிறுத்தம்! அடுத்த வாரம் தபால் சேவை ஆரம்பமாகும்!
01:04
Video thumbnail
டொராண்டோ கிழக்கு பகுதியில் வெள்ளை வேன் பட்டப் பகலில் திருட்டு! வலை வீசும் பொலிசார்
00:57
Video thumbnail
Top 25 Most Wanted பட்டியல்! டொராண்டோ கொலை சந்தேக நபர் முதலிடத்தில்
01:03
Video thumbnail
Top 25 Most Wanted பட்டியல்! டொராண்டோ கொலை சந்தேக நபர் முதலிடத்தில்
00:57
Video thumbnail
கனடா போஸ்ட் வேலைநிறுத்தம் காரணமாக டொராண்டோவில் வேகக் கேமரா அபராதங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!
01:15
Video thumbnail
கனடாவில் முதல்முறையாக துடிப்பு நின்ற இதயத்தை பயன்படுத்தி இதய மாற்று அறுவை சிகிச்சை!
01:30
Video thumbnail
தொடரும் கனடா போஸ்ட் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்
00:47
Video thumbnail
கனடாவில் கடுமையான அகதிகள் சட்டம்!
01:36
Video thumbnail
கனடியர்கள் விடுமுறை காலச் செலவுகளைக் குறைக்கத் திட்டம்
00:47

Related Articles

Latest Articles