சிறுவர்களை சிக்க வைக்க ஆபாசப் படங்களை இணைதளத்தில் பகிர்ந்த மிசிசாக்கா பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞனை ஏப்ரல் 9 அன்று பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
மிசிசாக்கா Eglinton Avenue East and Hurontario Street பிரதேசத்தில் உள்ள குறித்த இளைஞனின் வீட்டில் சோதனை பொலிசார் தீவிர சோதனையும் நடத்தியுள்ளனர்.
சிறுவர் பாலியல் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தமை, மேலும் சிறுவர்களை சிக்கவைக்க முயற்சித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த இளைஞன் மீது சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் போலி கணக்குகளை ஆரம்பித்து சமூக வலைத்தளத்தில் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.