சிறுவர்களுக்கு ஆபத்தா Facebook, Instagram? Meta-வுக்கு $942 மில்லியன் அபராதம் – செயலிகளையே மாற்ற உத்தரவு!

Facebook மற்றும் Instagram குழந்தைகளின் மனநலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கண்டறிந்த அமெரிக்காவின் New Mexico நீதிமன்றம், Meta நிறுவனத்திற்கு மேலும் 567 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பணத்தின் பெரும்பகுதி, இளைஞர்களுக்கான மனநல சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. மீதமான தொகை விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைச் சேவைகளுக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் செலவிடப்படும்.

இதற்கு முன்னர் மார்ச் மாதத்தில், Facebook மற்றும் Instagram குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என பொதுமக்களை தவறாக வழிநடத்தியதாகக் கண்டறிந்த நீதிமன்றம், Meta-வுக்கு 375 மில்லியன் டொலர் அபராதம் விதித்திருந்தது.

இதன்படி, இந்த ஒரே New Mexico வழக்கில் Meta எதிர்கொள்ளும் மொத்தத் தொகை 942 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

பணம் செலுத்துவதுடன் மட்டும் இந்தத் தீர்ப்பு முடிவடையவில்லை.

இளம் பயனர்களின் Facebook மற்றும் Instagram பயன்பாட்டுக்கு மாதாந்த வரம்புகள், notification கட்டுப்பாடுகள், பெரியவர்கள் சிறுவர்களைத் தொடர்புகொள்வதில் கடுமையான பாதுகாப்பு, AI chatbot-களுக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக புகார்களை மேலும் தீவிரமாக ஆய்வு செய்வது உள்ளிட்ட மாற்றங்களையும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும்.

ஆனால் இந்தத் தீர்ப்பை ஏற்காத Meta, மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இளம் பயனர்களைப் பாதுகாக்க ஏற்கனவே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் நிறுவனம் கூறுகிறது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles