கால்கரி நகரையே சோகத்தில் ஆழ்த்திய 11 வயது சிறுவனின் மரணம்: 2 வார தேடுதலுக்குப் பின் சடலம் மீட்பு!

கனடாவின் கால்கரி Calgary நகரில் கடந்த இரண்டு வாரங்களாகக் காணாமல் போயிருந்த Parker Wells என்ற 11 வயது சிறுவனின் சடலம், நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள நிலத்தடி நீர்க்குழாய் (pipe network) அமைப்பிற்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 16 ஆம் திகதி காணாமல் போன இந்த சிறுவனைத் தேடும் பணியில் நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள், தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில், பொதுமக்கள் ஒருவர் அளித்த ஆடை ஆதாரம் மற்றும் தகவலின் அடிப்படையில், Beaver Dam Business Park மற்றும் Deerfoot Trail ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மீண்டும் தேடுதல் நடத்தப்பட்டது.

அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, Deerfoot Trail பகுதிக்கு அடியில் உள்ள குறுகிய நீர்க்குழாய் அமைப்பிற்குள் சுமார் 450 முதல் 500 அடிகள் தொலைவில் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி Rich Wall தெரிவித்துள்ளார்.

சிறுவன் தவறுதலாக அந்த குழாய்களுக்குள் நுழைந்து பயணித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தச் சோகமான சம்பவத்திற்கு Calgary Police தலைமை அதிகாரி Katie McLellan, நகர மேயர் Jeromy Farkas மற்றும் கவுன்சிலர் DJ Kelly ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேடுதல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles