கனிம வளத்துறையில் அவுஸ்திரேலியாவுடன் கைகோர்த்தது கனடா – புதிய ஒப்பந்தங்களும் கைசாத்து!

ஆஸ்திரேலியா (Australia) மற்றும் கனடா (Canada) ஆகிய இரு நாடுகளும் முக்கிய கனிம வளங்கள் தொடர்பாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கனடா பிரதமர் Mark Carney, “பெரிய அதிகாரப் போட்டிகள் நிறைந்த உலகில், நடுத்தர நாடுகள் ஆதரவுக்காகப் போராடுவதை விட, வலிமைக்காக ஒன்றிணைய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கனடா தலைமையிலான G7 கனிம உற்பத்தி கூட்டணியில் ஆஸ்திரேலியா இணைவதாக பிரதமர் Anthony Albanese அறிவித்திருந்தார்.

உலகின் லித்தியம் (Lithium) மற்றும் யுரேனியத்தில் (Uranium) மூன்றில் ஒரு பங்கையும், இரும்புத் தாதுவில் (Iron Ore) 40% க்கும் அதிகமானவற்றையும் இந்த இரு நாடுகளுமே உற்பத்தி செய்கின்றன.

செமிகண்டக்டர்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான கனிமங்களுக்காக சீனாவைச் (China) சார்ந்திருப்பதைத் தவிர்த்து, விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்த இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா ஏற்கனவே இதற்காக 1.2 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ள நிலையில், தற்போது கனடாவின் பாதுகாப்பு இருப்பு முறையோடு இது ஒருங்கிணைக்கப்படும்.

Related Articles

Latest Articles