கனடிய இராணுவத்தில் நிற பாகுபாடு – CAF கடும் எச்சரிக்கை!

கனடிய ஆயுதப்படைகளில் (CAF) பணியாற்றும் சில உறுப்பினர்கள், வெள்ளை நிற பாகுபாடு கொள்கைகளை ஊக்குவிக்கும் பிரத்தியேக இணையதளங்களில் கணக்குகளைக் கொண்டிருப்பது அண்மைய புலனாய்வில் அம்பலமாகியுள்ளது.

கடந்த ஆண்டு கியூபெக் (Quebec) பகுதியில் இராணுவ ஆயுதங்களைப் பயன்படுத்தி நிலங்களை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்திலும் இராணுவ சிப்பாய்கள் தொடர்புபட்டிருந்தனர்.

இராணுவப் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் மீதான ஈர்ப்பு காரணமாகவே தீவிரவாத அமைப்புகள் இராணுவத்தை நோக்கி ஈர்க்கப்படுவதாகக் இது குறித்து நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் (University of New Brunswick) குற்றவியல் துறை பணிப்பாளர் கலாநிதி டேவிட் ஹோப்மேன் (Dr. David Hofmann) குறிப்பிடுகிறார்.

ஆட்சேர்ப்புப் பிரிவினர் விண்ணப்பதாரர்களைத் தீவிரமாகப் பரிசோதித்தாலும், இத்தகைய கொள்கையுடையவர்களை முற்றாகக் கண்டறிவது சவாலாகவே உள்ளது.

இராணுவ உறுப்பினர்களிடையே இத்தகைய தீவிரவாதக் கொள்கைகள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், தேவையேற்படின் அவர்கள் படையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் CAF எச்சரித்துள்ளது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles