கனடா மீது அமெரிக்கா ராணுவ ஆக்கிரமிப்பு : முன்னாயத்தமாகும் பிரதமர் கார்னி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கனடா மீது ராணுவ ரீதியான ஆக்கிரமிப்பை (Military Invasion) மேற்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து தாம் ஆராய்ந்து ஆயத்தமாக இருப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.

தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times) இதழுக்கு அளித்த பேட்டியில், இது நடப்பதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே (Extreme tail risk) உள்ளபோதிலும், ஒரு தலைவராக இதற்கு தயாராக இல்லாவிட்டால் அது பொறுப்பற்ற தனமாகிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை சார்ந்திருக்கும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப நிலையை குறைக்கவும், சீனாவுடன் பொருளாதார உறவை விரிவுபடுத்தவும் கனடா திட்டமிட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தையும் கனடா மறுபரிசீலனை செய்து வருகிறது. இதனிடையே, ஓட்டவாவில் (Ottawa) உள்ள ‘டிரம்ப் அவென்யூ’ (Trump Avenue) என்ற வீதியின் பெயரை மாற்ற நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வரும் டிசம்பர் மாதம் கனடாவுக்கு வருகை தரவுள்ளதாகவும் மார்க் கார்னி உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles