கனடாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவை அடுத்த 100 ஆண்டுகளுக்கு வலுப்படுத்தும் முக்கிய பிரகடனத்தில் பிரதமர் Mark Carney மற்றும் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy கையெழுத்திட்டுள்ளனர்.
Zelenskyy-யின் கனடாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது Calgary-யில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
“100-Year Partnership” எனப்படும் இந்த புதிய கூட்டாண்மை, கனடா–உக்ரைன் உறவை விரிவான Strategic Partnership ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், உக்ரைனின் மீள்கட்டமைப்பு மற்றும் இரு நாடுகளின் மக்களுக்கிடையேயான உறவு ஆகியவை இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதனுடன் பாதுகாப்பு மற்றும் Security Cooperation தொடர்பான மற்றொரு பிரகடனத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
குறிப்பாக Drone தொழில்நுட்பத்தில் கனடாவும் உக்ரைனும் இணைந்து செயல்படவுள்ளன.
கனடிய இராணுவம் மற்றும் Coast Guard-க்கு தேவையான drones-ஐ விரைவாக பெற்றுக்கொள்ள புதிய தேசிய Drone Marketplace ஒன்றையும் கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மில்லியன் கணக்கான drones தயாரிக்கக்கூடிய தொழிற்சாலைகள், supply chains மற்றும் உற்பத்தித் திறனை கனடாவில் உருவாக்குவதே இலக்கு என பிரதமர் Mark Carney அறிவித்துள்ளார்.
உக்ரைனின் போர்க்கள அனுபவத்தையும், கனடாவின் manufacturing, software மற்றும் Artificial Intelligence தொழில்நுட்பத்தையும் இணைத்து drones மற்றும் counter-drone systems உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ள குறைந்த செலவில் அதிகளவில் interceptor systems உருவாக்கும் Ukraine-ன் Project Freya திட்டத்திற்கும் கனடா ஆதரவு வழங்கவுள்ளது.
2022ஆம் ஆண்டு ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பு ஆரம்பித்ததிலிருந்து கனடா, உக்ரைனுக்கு 8.5 பில்லியன் டொலருக்கும் அதிகமான இராணுவ உதவியை வழங்கியுள்ளது.
தற்போதைய புதிய ஒப்பந்தங்களுடன், கனடா–உக்ரைன் உறவு பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத் துறையில் அடுத்த முக்கிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
