அமெரிக்காவின் முன்னாள் அதிபர் Bill Clinton, கனடாவின் பிரதமர் Mark Carney உலகிலேயே மிகத் தகுதியான தலைவர்களில் ஒருவர் என்று புகழ்ந்துள்ளார்.
புளோரிடாவில் (Florida) நடைபெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் David Jolly யின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், அமெரிக்க அதிபர் Donald Trump கனடாவை மிக மோசமாக நடத்துவதாகக் குற்றம்சாட்டினார்.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற்றலாம் என்ற Donald Trump இன் பேச்சுக்கு Bill Clinton கடும் கண்டனம் தெரிவித்தார்.
பிரித்தானியா (U.K.) மற்றும் கனடா (Canada) ஆகிய இரு நாடுகளின் மத்திய வங்கியின் தலைவராகப் பணியாற்றியுள்ள Mark Carney, நீண்டகாலமாகத் தனக்கு நண்பர் என அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் கடுமையான வர்த்தகக் கொள்கைகளாலும் வரிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள கனடாத் தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, பிரதமர் Mark Carney மற்றும் Ontario மாகாண அரசு இணைந்து 9 பில்லியன் டாலர் நிதியுதவித் திட்டத்தை அறிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தகப் போர் மற்றும் பதற்றமான சூழலில், அமெரிக்க முன்னாள் அதிபர் Bill Clinton இன் இந்தக் கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
