அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையிலிருந்து கனடா விலகியதற்கு “வேறு வழியே இருக்கவில்லை” என்று கனடாவின் முன்னாள் பிரதமர் Stephen Harper தெரிவித்துள்ளார்.
Toronto-வில் நடைபெற்ற Canada Investment Summit-இன் நிறைவு உரையில் பேசிய Harper, கனடா தனது இறையாண்மையையும் பொருளாதார சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டுமெனில், அமெரிக்காவை அதிகமாகச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்க வேண்டும் என்று கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்த முயற்சிகள் முறிந்ததைத் தொடர்ந்து, பிரதமர் Mark Carney பேச்சுவார்த்தைகளை நிறுத்தி கனடிய பேச்சுவார்த்தைக் குழுவை Ottawa-வுக்கு திரும்ப அழைத்திருந்தார். அதைத் தொடர்ந்து பல பில்லியன் டொலர் மதிப்புள்ள கனடிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்ததாக Canadian Press தெரிவித்துள்ளது. கனடாவும் பதிலடி வரிகளை அறிவித்தது.
இந்த மாற்றம் கனடாவுக்கு செலவுகளை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக்கொண்ட Harper, அதே நேரத்தில் புதிய பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கக்கூடும் என்றார்.
குறிப்பாக, கனடாவின் மிகப்பெரிய இயற்கை வளங்களை பயன்படுத்தி நாட்டை உலகளாவிய Energy Superpower-ஆக மாற்றுவதற்கான வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Energy உள்ளிட்ட பெரிய திட்டங்களுக்கான அனுமதிகளை விரைவுபடுத்த Carney அரசு எடுத்துள்ள சில நடவடிக்கைகளையும் Harper வரவேற்றார். அதே நேரத்தில், கனடாவை மேலும் போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரமாக மாற்ற இன்னும் பல மாற்றங்கள் தேவை என்றும் கூறினார்.
