கனடாவில் பெருகும் கடன் சுமை – மறைமுகமாக பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது!

கனடாவில் வீட்டு உபயோக நிதிக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தப் புள்ளிவிவரங்கள் ஓரளவுக்குச் சீராகத் தெரிகிறது.

இருப்பினும், ஆழமாகப் பார்க்கும்போது பல கனடியர்கள் கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Goeasy Ltd. போன்ற கடன் வழங்கும் நிறுவனங்கள் கடந்த மாதம் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்திருப்பது இதற்கு ஒரு சான்றாகும்.

அதன்படி, 2025 இல் நுகர்வோர் வங்குரோத்து நிலை 140,457 ஆக உயர்ந்துள்ளது. இது 2009 க்கு பிறகு பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

கடன் அட்டைகள், கார் கடன்கள் மற்றும் இதர தவணைக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

மேலும், வீட்டு உரிமையாளர்கள் ஓரளவுக்குச் சமாளித்தாலும், வாடகைக்கு வசிப்பவர்கள் மற்றும் சொந்த வீடு இல்லாதவர்கள் அதிக நிதி நெருக்கடியைச் சந்திக்கின்றனர்.

குறிப்பாக, ஒன்டாரியோ (Ontario) மற்றும் பி.சி (B.C.) மாகாணங்களில் இத்தாக்கம் மிக அதிகமாக உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததே பலர் கடனில் சிக்கக் காரணமாகியுள்ளதாகக் கிரெடிட் கனடா (Credit Canada) தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை அதிகரிப்பதும் கூடுதல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.

அதனால், கடன் வழங்கும் நிறுவனங்களும் தற்போது தங்கள் விதிமுறைகளைக் கடுமையாக்கி, கடன் வழங்குவதைக் குறைத்துள்ளன.

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகள் வீட்டு உரிமையாளர்களுக்குச் சிறு ஆறுதலை அளித்தாலும், அதிக வட்டி விகிதங்களைக் கொண்ட சப்-பிரைம்‘ (Sub-prime) கடன் வாங்குபவர்களுக்கு அது பெரிய அளவில் உதவவில்லை.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles