டொரண்டோ உள்ளிட்ட ஒன்டாரியோ மாகாணத்தின் சில பகுதிகள் கடுமையான பனிப்புயலால் பாதிக்கப்பட்டு, இலட்சக்கணக்கானோர் மின்சாரம் இழந்தனர். மின் விநியோகத்தை சரிசெய்யும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த வாரம் காலநிலை பெரிய அளவில் மாறலாம் என சுற்றுச்சூழல் கனடா அறிவித்துள்ளது.
டொரண்டோவில் வியாழக்கிழமை வெப்பநிலை 18°C வரை எட்டக்கூடும் என்றும் அது 20°C வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதன்பின்னர் வார இறுதியில் வெப்பநிலை சுமார் 10°C வரை குறையலாம் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பருவத்தில் எதிர்பாராத வகையில் காலநிலையின் ஏற்ற இறக்கங்கள் தொடரும் என்றும் வார இறுதியில் வெப்பநிலை மிதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.