டொராண்டோவின் அல்பானி மருத்துவ மனையில் (Albany Medical Clinic) பணியாற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் மைக்கேல் ஆண்டில் (Dr. Michael Antil), கனடாவின் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பைப் பெற்றுள்ளார்.
வட கரோலினாவைப் (North Carolina) பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு, டொராண்டோவில் மட்டும் சுமார் 2,100 நோயாளிகள் உள்ளனர்.
பல வருடங்களாக நீடித்த நிர்வாகத் தாமதங்களுக்குப் பிறகு, தற்போது இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
கனடாவின் ‘Express Entry’ திட்டத்தின் கீழ், மருத்துவத் துறையில் உள்ள ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அழைக்கப்பட்ட 391 மருத்துவர்களில் இவரும் ஒருவர்.
இவரது வழக்கறிஞர் ஐலீன் சாலமன் (Ilene Solomon) கூறுகையில், கனடாவில் ஒரு வருட மருத்துவ அனுபவம் மற்றும் மொழித் திறன் கொண்ட மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, சுமார் 7 மாத காலப்பகுதிக்குள் இவருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.










